top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

அறத்தான் வருவதே இன்பம் ...38, 39

24/02/2021 (38)

நன்றி, மகிழ்ச்சி, வாழ்த்துகள்

திருக்குறளில் அனைவருக்கும் பொதுவான பகுதி ‘பாயிரவியல்’. பாயிரவியலில் நான்கு அதிகாரங்கள். வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை மற்றும் அறன் வலியுறுத்தல்.


வாழ்க்கை நெறியே அறமாக இருக்கனும்ன்னு பத்து குறள்களில் பல் வேறு விதமாக எடுத்து சொல்கிறார். நாம எட்டு குறள்களை இதுவரை பார்த்துட்டோம்.


மீதி இருக்குற இரண்டு குறள்களை இன்றைக்கு பார்த்துடலாம்.

ஒவ்வொரு நாளும் வீணாகாமல் அவ்வர்களுக்கு உண்டான அறத்தை கடை பிடித்தால் அதுவே அனைவருக்கும் நிம்மதியையும் அமைதியையும் தந்து வாழ்நாட்களை கடக்க உதவும்ன்னு குறள் 38ல் சொல்கிறார்.


வீழ்நாள் படாஅமை நன்றாற்றின்அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல். “ --- குறள் 38


வீழ்நாள் = வீணாகின்ற நாட்கள்; படாஅமை = அமைந்து விடாமல்; நன்றாற்றின் = அறம் செய்யின்; அஃதொருவன் =அது ஒருவருக்கு; வாழ்நாள் =வாழுகின்ற நாட்களை; வழியடைக்கும் கல் =அமைதியாக கழித்து இவ்உலகத்தை விட வழி.


அறமானது ‘சிறப்புஈனும், செல்வமும் ஈனும்’ ன்னு 31 வது குறளில் சொன்ன வள்ளுவப்பெருந்தகை, அதுல வருவது தான் உண்மையான இன்பமும் புகழும்ன்னு சொல்லிட்டு மற்ற வகையில கூட இன்பம் வரலாம் ஆனா அதுவே துன்பத்துக்கு காரணமாக அமைந்து ‘புகழும்’ கிடைக்காதுங்கிறார் குறள் 39 ல்.


அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழு மில.” ---குறள் 39; அதிகாரம் – அறன் வலியுறுத்தல்


அறத்தான்வருவதேஇன்பம் = அறத்தால் வருவதே இன்பம்; மற் று எல்லாம் = அறமல்லாதது எல்லாம்; புறத்த = தள்ளத்தக்கன, புறம்பானவை ; புகழும் இல = புகழும் கிடைக்காது


இந்த அறன் வலியுறுத்தல்ங்கிற அதிகாரத்தைதான் திருக்குறளுக்கு அடித்தளமா அமைத்திருக்கார் வள்ளுவப்பெருமான். நம்மால் முடிந்தவரையில் இதை விளங்கிடுவோம். தொடர்ந்து பயனிப்போம்.


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.


உங்கள் அன்பு மதிவாணன்.






5 views0 comments

Comments


bottom of page