22/03/2021 (64)
அறிவு தான் ஆகப் பெரிய ஆயுதம் மட்டுமில்லாம கேடயமும் கூட!
கல்வி input (உள்ளீடு) என்றால் அறிவு (output) விளைவு. கற்றலின் வெளிப்பாடு அறிவு.
அறிவு அகக்கருவியாகவும்(internal), புறக்கருவியாகவும்(external) வேலை செய்யும். அகக்கருவியா துணிவு, தன்னம்பிக்கை போன்றவைய வளர்க்கும், மனதிலே உறுதியை வளர்க்கும். புறக்கருவியா வெளிய இருந்து வரும் தாக்குதல்களை சமாளிக்க உதவும்.
எந்த ஒரு அழிவிலிருந்தும் காக்கும் வல்லமை அறிவுக்கு உண்டு. பகைக்கும் இரண்டு குணம் உண்டு. வெளிய இருந்து தாக்கும், உள்ளேயும் நமது மன உறுதியைக் குலைக்கும். இந்த இரண்டுக்கும் சரியான பாதுகாப்பு வளையமா (அரண்) இருக்க கூடியது அறிவு தான்.
இதை நம்ம வள்ளுவப்பேராசான் குறள் 421 ல சொல்கிறார் இப்படி:
“அறிவு அற்றம் காக்கும்கருவி செறுவார்க்கும் உள்ளழிக்கல் ஆகா அரண்.” --- குறள் 421; அதிகாரம் – அறிவுடைமை
அற்றம் = அழிவு; செறுவார்க்கும் = பகைவர்கட்கும்; உள்ளழிக்கல் ஆகா= உள்ளே புகுந்து குழப்பம் பண்ணி காலி பண்ண முடியாத; அரண் = பாதுகாப்பு வளையம்
அறிவு கருவியாகவும் (tool) அதே சமயத்திலே கேடயமாகவும் (shield) பயன் படக்கூடியது.
போருக்கு களமும் காலமும் நாம தான் குறிக்கனும். தவிர்க்கவும் தாக்கவும் அறிவு தேவை.
இந்த 43வது அதிகாரத்தில கடைசி குறள் 430ல தீர்கமா இப்படி சொல்கிறார் நமது வள்ளுவப்பெருந்தகை:
“அறிவுடையார் எல்லாம் உடையர் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர். “ குறள் 430; அதிகாரம் – அறிவுடைமை
என்ன இருந்தும் அறிவு கொஞ்சம் குறைவா இருந்தா நல்லாவா இருக்கும்?
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments