09/02/2021 (23)
‘கம்’முனு இருந்தா ‘ஜம்’னு இருக்கலாம்
நலம். நன்றி. வாழ்த்துகள்.
“மோனம் என்பது ஞான வரம்பு”
அறிவின் எல்லை என்னன்னு கேட்டா மவுனம்ன்னு சொல்றாங்க பேரறிஞர்கள்.
அதுக்கு எதிர்மறையா நான் பேசிட்டே இருக்கறதிலே தெரியுது நான் எப்படி பட்ட ஆளுன்னு! நிற்க.
‘மெளனம் கலகத்தை தவிர்கும்’ ன்ற பொருளில் ‘மெளனேன கலகோ நாஸ்தி’ ன்னு வேற ஒரு மொழியிலே கூட சொல்றாங்க.
ஆங்கிலத்தில தாமஸ்கார்லைல் “Speech is silver, silence is golden” ன்றார்.
ஆனா, இதெல்லாம் மெளனத்தின் சிறப்பை சொல்றதுக்கு பயன்படுத்தறாங்க.
நம்ம வள்ளுவப்பெருந்தகை இதை ‘வஞ்சப்புகழ்ச்சி’யா, புகழ்வது போல பழித்து, சொல்றாரு. ஆனா அதிலே கூட நம்மாளுக்கு ஒரு குறிப்பு இருக்கறது தான் இதன் சிறப்பு.
படிக்காதவனும் ரொம்பவே நல்லவன்னு போடறாரு. எப்போன்னா அவன் வாயை முடிட்டு இருந்தான்னா! நம்மாளை வஞ்சபுகழ்சியும் பண்றாரு, அதே சமயம் ஒரு குறிப்பையும் காட்டிடறார்.
இதை தான் குறள் 403 இல் வைத்திருக்கிறார் இப்படி:
“கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லாது இருக்கப் பெறின்.” --- 403, கல்லாமை
கற்றுஅறிந்தவர்கள் முன் நம்மாளு ‘கம்’முனு இருந்தா ‘ஜம்’னு இருப்பான். சரிதானே!
சரி, இன்றையிலிருந்து என் வாயை(எழுதறதை) மூடிடலாம்ன்னு தோணுது.
என் ஆசிரியர்கிட்ட இருந்து அழைப்பு வருது. பேசிட்டு வந்துடறேன்.
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments