06/05/2021 (109)
நன்றி, நன்றி, நன்றி
ஒருத்தர் நமக்குச் செய்த நன்றியை மறக்கக் கூடாது. நன்றல்லதை அன்றே மறந்துடனும் சொன்ன நம்ம பேராசான் இன்னும் ஒரு படி மேலே போகிறார் அடுத்த குறளில்.
ஒரு சமயம் நமக்கு ஒரு உதவி செய்தவர், காலத்தின் கட்டாயத்தினாலே நமக்கு ஒரு தீமை செய்தாலும், அந்த தீமை நம்மையே அழிப்பது போல துண்பத்தைத் தந்தாலும், அவர் முன் செய்த உதவியை மனதில் கொண்டால் நம்ம மனது அமைதியாயிடனுமாம். இதுவும் கடந்து போகும்னு விட்டுடனுமாம். இதோ அந்தக் குறள்:
“கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.” --- குறள் 109; அதிகாரம் -செய்ந்நன்றியறிதல்
கொன்றன்ன = நம்மை அழிக்க வல்ல; இன்னா = துண்பங்கள்/தீமைகள்; செயினும் = செய்தாலும்; அவர்செய்த = அவர் முன்னாடி செய்த; ஒன்று = ஒரு; நன்று = நன்மை; உள்ள = நினைக்க; கெடும் = அந்த துண்பங்களும் அழியும்/மறையும்.
இதுதான் அறிவுடையார் செயல். நன்மை செய்தவர்கள் கொடுக்கும் துண்பங்கள் மட்டுமல்ல, வேற எப்படியும் துண்பங்கள் வந்தாலும் அந்த துன்பங்கள் மறைந்துடுமாம். அதுக்கு ஒரு குறள் இருக்காம் கண்டுபிடிப்போமா?
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments