நன்றி, நலம், மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
மீள் பார்வை:
ஒரு சமயம் நமக்கு ஒரு உதவி செய்தவர், காலத்தின் கட்டாயத்தினாலே நமக்கு ஒரு தீமை செய்தாலும், அந்த தீமை நம்மையே அழிப்பது போல துண்பத்தைத் தந்தாலும், அவர் முன் செய்த உதவியை மனதில் கொண்டால் நம்ம மனது அமைதியாயிடனுமாம். இதுவும் கடந்து போகும்னு விட்டுடனுமாம். இதோ அந்தக் குறள்:
“கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும்.” --- குறள் 109; அதிகாரம் -செய்ந்நன்றியறிதல்
இதுதான் அறிவுடையார் செயல். நன்மை செய்தவர்கள் கொடுக்கும் துண்பங்கள் மட்டுமல்ல, வேற எப்படியும் துண்பங்கள் வந்தாலும் அந்த துன்பங்கள் மறைந்துடுமாம். அதுக்கு ஒரு குறள் இருக்காம் கண்டுபிடிப்போமா? ங்கிற கேள்வியோட நிறுத்தியிருந்தோம்.
அதுக்கு குறள்மணி ரத்தன் கூட இரு குறள்களை அனுப்பியிருந்தார். அதை பார்பதற்கு முன்னாடி ஒரு திரை இசைப் பாடல்:
“… வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவது இல்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.
…
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு
…
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா …”
‘உள்ளக்கெடும்’ ங்கிற சொற்றொடருக்கு ஒரு அருமையான விளக்கமாகவே இந்தப் பாட்டை பார்க்கலாம்.
சரி குறளுக்கு வருவோம்:
“வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.” --- குறள் 622; அதிகாரம் – இடுக்கண் அழியாமை
‘தலைக்கு மேல வெள்ளம்’ போல துன்பம் வந்தாலும் அறிவுடையவர்களுக்கு அந்த துன்பம் விலகிடுமாம். அது எப்படி?
ஆதாங்க, “மாற்றி யோசிங்க, Life easyங்க! (லைஃப் ஈஸி)”.
மாற்றி யோசிப்போம். மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments