top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

03/09/2024, பகவத்கீதை, பகுதி 19

அன்பிற்கினியவர்களுக்கு:

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது போரினால் ஏற்படும் வன்முறைகளை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.


டாட்ஷிரிப்பா மாட்ஷிமா (Tadziripa Madzima) தமது கட்டுரையில், ஆயுத மோதல்களினால் (Armed Conflict) பெண்கள் மற்றும் குழந்தைகள்  கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர் என்கிறார்.


(The effects of conflict are felt hardest by women and children, 10 May 2013 - Tadziripa Madzima in her blog article)


வரலாறு நெடுகிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடூரமான தாக்குதல்களைக் காணலாம். எடுத்துக்காட்டாக: ஹோலோகாஸ்டில் (The Holocaust) பதினோரு இலட்சம் குழந்தைகள் கொல்லப்பட்டார்கள் என்கிறது வரலாறு.

(இரண்டாம் உலகப் போரின் போது ஐரோப்பிய யூதர்களின் இனப்படுகொலையே ஹோலோகாஸ்ட் ஆகும். 1941 – 45).


அண்மையில் நிகழ்ந்த ருவாண்டா இனப்படுகொலை மற்றுமோர் எடுத்துக்காட்டு. இந்த இனப்படுகொலையின்போது பல பெண்கள் மற்றும் குழந்தைகள் பலாத்காரம் செய்யப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர்.  (ருவாண்டா இனப்படுகொலை 1994 இல் நிகழ்ந்தது. இது துட்சிகளுக்கு (Tutsi) எதிரான இனப்படுகொலை என்றும் வழங்கப்படுகிறது)

 

இந்தக் கொடுமைகளில் இருந்து தப்பிய பெண்கள் பெரும்பாலும் தங்கள் வாழ்நாள் முழுவதும் கற்பழிப்பு, போர் மற்றும் மரணம் போன்ற தெளிவான மற்றும் திகிலூட்டும் பிம்பங்களுடன் வாழ வேண்டியிருக்கும். பாலியல் ரீதியாக பரவும் நோய்கள், களங்கம் மற்றும் சில நேரங்களில் தேவையற்ற கர்ப்பம் ஆகியவற்றால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இடம்பெயர்ந்த பிறகு குடும்பங்களை ஒன்றாக வைத்திருப்பது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அழிக்கப்பட்ட உள்கட்டமைப்புகளில் உணவு, உடை மற்றும் தங்குமிடம் வழங்குவது போன்ற கடினமான பணியை அவர்கள் எதிர் கொள்கின்றனர் என்கிறார் டாட்ஷிரிப்பா மாட்ஷிமா.


ஆயுத மோதல்களினால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைக்கும் பெண்களும் குழந்தைகளும் தம் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் கடும் இன்னல்களுக்கு ஆளாகிறார்கள் அல்லது கைவிடப்பட்டு தங்கள் உயிரை இழக்கிறார்கள் என்பதனைப் பல ஆய்வறிக்கைகள் நமக்குத் தெளிவாக்குகின்றன. இது நிற்க.

 

போரினால் குல நாசம் ஏற்படும் என்ற அர்ஜுனன் சொல்லும் பொழுது நாம் இந்த நிகழ்வுகளை மனத்தில் கொண்டால் ஓரளவிற்குத் தெளிவு பிறக்கலாம்.

மேலும் அர்ஜுனன் தொடர்கிறான்.


போரினால் ஏற்படும் குழப்பத்தால் வழிவழியாக வந்த ஜாதி ஓர்மைகளும் குல தர்மங்களும் அழிந்து போகும்.

அத்தகைய பாரம்பரியங்களை அழிப்பவர்கள் வாழ்க்கை நரகமாகிவிடாதா? … 1:43-44


ஜாதி என்ற சொல் பகவத்கீதையில், எனக்கு அறிந்தவரையில், இந்த ஒரு இடத்தில் மட்டும் வருகிறது.


இந்தப் பாடல்களுக்குப் பொருள் சொல்பவர்கள் பலவிதம்!


சரி, அந்தக் காலத்தில் சாதி (ஜாதி) என்ற சொல் எதனைக் குறித்திருக்கும் என்பது ஒரு வினாவாக இருக்கிறது.


தற்போதுள்ள சாதிக் கட்டமைப்பும், அதன் விரிவுகளும் அப்பொழுது இருந்திருக்க வழியில்லை. ஆனால், திருக்குரான் மூலம் சமுகங்களும், குலங்களும் இருந்தன என்பதனையும் அதனைப் படைத்தவர் தாம்தாம் என்பதனை எல்லையற்ற கருணையாளன் அல்லாவின் இறை வசனத்தால் அறிகிறோம்.


இங்கேயும் discovered என்ற பொருளே பொறுத்தமானதாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புத்தாக்கத்திற்கும் (Invention) மற்றும் கண்டுபிடிப்பிற்கும் உள்ள வேறுபாட்டைக் குறித்து நாம் முன்னர் சிந்தித்துள்ளோம். காண்க 24/08/2024, பகவத்கீதை, பகுதி 10.


எல்லையற்ற கருணையாளன் அல்லாவும் தொழில்களின் பகுப்பினையே சுட்டுகிறார் என்றே நினைக்கிறேன்.


வர்ணம் என்பது தொழில்களின் பகுப்பு (Division of Labours) என்றால் வர்ணமும் சாதியும் ஒன்றல்ல என்பது நிச்சயம்!


நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்




 

9 views1 comment

Recent Posts

See All

1 commentaire


Membre inconnu
03 sept. 2024

very well explained . A front line war reporter of PTI of india pakistan war had narrated these to me.

J'aime
Post: Blog2_Post
bottom of page