அன்பிற்கினியவர்களுக்கு:
1330 குறள்களில் ஒரே ஒரு குறளில் மட்டும் துணைக்கால் எழுத்தினை பயன் படுத்தலை வள்ளுவப்பெருமான்.
அதிசயமாகத்தான் இருக்கு. அந்த பெருமையை எதுக்கு அமைத்திருக்கிறார் என்றால் கல்விக்கு தான்.
ஒவ்வொரு குறளும் எழுத்தெண்ணி படைத்தது போல இருக்கு. அந்த குறளை பார்க்கலாம்.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. - 391; - கல்வி
கற்பவை கற்க = கற்க வேண்டியவற்றை கற்க, கற்கத்தக்க நூல்களை கற்க, கல்வி பல வகை அதில் நாம் கற்க வேண்டியதை தேர்ந்தெடுத்து கற்க – இப்படி பல அறிஞர்கள் பொருள் சொல்றாங்க.
குமரகுருபரர், சகலகலாவல்லி மாலையில் இப்படி போடறார்:
“தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப்”
பல தரப்பட்ட உயர்வான நூல்களில், தன் துறை சார்ந்த நூல்களை கற்கணுமாம், அதனையும் சுவைபட மத்தவங்களுக்கு சொல்லுகிற பேச்சு திறமையும் வேணுமாம்– குமரகுருபரர்
கசடற = சந்தேகத்துக்கு இடமின்றி;
அதற்குத் தக நிற்க = அதனை தொடர்ந்து ஒழுகுக ; ஒழுகுக – ஒழுக்கமாக்குக
அப்படி செய்தால், அது தான் ‘கேடில்விழுச்செல்வம்’
எதை கற்கணும்னு யோசனை பண்ணும் போது நாலடியாரிலிருந்து ஒருபாடல் நினைவுக்கு வருது.
தொடருவோம் நாளை.
நன்றி. மீண்டும் சந்திப்போம் வேறு ஒரு குறளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments