top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

மறக்கக் கூடாதது ... குறள் 108

21/01/2021 (4)

ஒரு கேள்வியில் இருந்து ஆரம்பிப்போம். எது சிறந்தது?

சந்தேகமே இல்லாம சொல்லிடலாம். இயற்கை தான் சிறந்தது.

இயற்கையின் படைப்புகளிலே எது ஆகச் சிறந்தது? மனிதன் தான்.

மனிதனின் படைப்புகளிலே எது உச்சம்ன்னு கேட்டா, கருத்துகளையும், கற்பனைகளையும் கலந்து இலக்கை நோக்கி இயங்க வைக்கும் இலக்கியங்கள் தான் சிறந்தது. மூன்று காலங்களையும் இணைக்கும் திறன் கொண்டது அது.

இலக்கியங்களின் சாரம் எதுன்னு பார்த்தா, அது தான் கவிதை இலக்கியம்.

கவிதைகளின் சிகரம் எதுன்னு எட்டிப் பார்த்தோம்னா, அது தான் சுருங்கச்சொல்லி விளங்க வைக்கிற குறள் வடிவம்.

குறள்களில் சிறந்தது “திருக்குறள்”

அந்த திருக்குறளில் சிறந்த குறள் எதுன்னு என்னைக் கேட்டா, என்னையும் நன்றாக வாழ வைக்கும், நம் எல்லோரையுமே உயர்த்தக் கூடிய, மேலும் மறக்கக்கூடாத குறள் தான் அது.

அது தான் குறள் 108!


“நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.” --- குறள் 108; அதிகாரம் - செய் நன்றி அறிதல்


(It is never good to let the thought of good things done by others pass away; Of things not good, It is good to forget those at the very moment.)


108 ஒரு சிறப்பான எண். புராணிகர்களுக்கு மட்டுமல்ல, விஞ்ஞாணிகளுக்கும் தான்.

(பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் ஏறத்தாழ சூரியனின் விட்டத்தில் 108 மடங்கு. அதே போல, பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் ஏறத்தாழ சந்திரனின் விட்டத்தில் 108 மடங்கு. ஆச்சரியமாத்தான் இருக்கு! )


நன்றி. மீண்டும் சந்திப்போம் வேறு ஒரு குறளுடன்.

உங்கள்

அன்பு மதிவாணன்



18 views2 comments

2 Yorum


முற்றிலும் உண்மை. நன்றியுணர்வு நமக்கும் உள்ளுக்குள் சந்தோஷம் தரும்.

Beğen
Şu kişiye cevap veriliyor:

நன்றி

Beğen
Post: Blog2_Post
bottom of page