top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

நினைத்தது நினைத்த மாதிரியே நடக்க - குறள் 666

Updated: Apr 28, 2023

18/01/2021 (1)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

நாம ஒரு பொருளை மறைத்து வைக்க எதன் நடுவிலேயாவது வைப்போம் இல்லையா அது போலத் திருவள்ளுவப் பெருமான் ஒரு முக்கியமான குறளை மறைத்து வைத்திருக்கிறார். அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாமா?

நமக்குத் தெரியும் மொத்தக் குறள்களின் எண்ணிக்கை 1330. அதில் பாதி = 665.


இது தெரியதா எனக்குன்னு கேட்கறீங்க ? கொஞ்சம் பொறுத்துக்குங்க!

நாம நினைத்தது நடந்ததுன்னா ! ---“ஓஹோ” இல்லையா?


நாம நினைத்ததெல்லாம் நடந்ததுன்னா ! --- “ஓஹோ ஹோ ஹோ …”


நாம நினைத்ததெல்லாம் நாம நினைத்த மாதிரியே நடந்ததுன்னா!--- “பேஷ், பேஷ், ரொம்ப நன்னாயிருக்கே!”


அந்த இரகசியத்தைதான், நம்ப திருவள்ளுவர், குறள் 666 லே வைச்சிருக்கார்!

அந்தக் குறள்:


எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்.” --- குறள் 666; அதிகாரம் – வினைத்திட்பம்


(திண்ணியர்-உறுதியுடையவர்)


நமக்கு ஒண்ணு நாம நினைத்த மாதிரியே கிடைத்தால் எப்படியிருக்கும்!

நன்றி. மீண்டும் சந்திப்போம் வேறு ஒரு குறளுடன்.


உங்கள் அன்பு மதிவாணன்




Comments


Post: Blog2_Post
bottom of page