top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

அச்சம் உடையார்க்கு ... குறள்கள் 534, 535, 435

27/11/2021 (277)

துணிந்தவனுக்கு துக்கம் இல்லை; பயந்தவனுக்கு பாயும் தொல்லை!


பொச்சாப்பு அளவிறந்த கோபத்தைவிட தீது என்று முதல் குறளிலும் (531), வறுமை எப்படி அறிவினைக் கொல்லுமோ அதுபோல பொச்சாப்பு ஒருவனின் புகழைக் கொல்லும் என்று இரண்டாவது குறளிலும் (532), பொச்சாப்பு இருந்தால் புகழ் கிடைப்பதற்கு வழியே இல்லை: இது உலகத்து உண்மை என்று மூன்றாவது குறளிலும் (533) சொல்லியிருந்தார் நம் பேராசான். மேலும் தொடர்கிறார்.


எவ்வளவுதான் பாதுகாப்புகள் இருந்தாலும், மனதிலே பயம் குடிகொண்டுவிட்டால் அவர்களைத் தேற்றுவது கடினம். அதுபோல பொச்சாப்பு உடையாருக்கு, கடமையை மறப்பவர்க்கு என்னதொரு நல்ல நிலைமை வாய்த்திருந்தாலும் அதனால் பயன் இல்லாமல் போகுமாம்.


வேற, வேற மாதிரி சொல்லி பொச்சாப்பின் தன்மைகளை படம் பிடித்துக்காட்டுகிறார்.


அச்சம் உடையார்க்கு அரண் இல்லை ஆங்கில்லை

பொச்சாப்பு உடையார்க்கு நன்கு.” --- குறள் 534; அதிகாரம் – பொச்சாவாமை


அச்சம் உடையார்க்கு அரண் இல்லை = மனதிலே அச்சம் குடிகொண்டுவிட்டால் அவர்களுக்கு எந்த பாதுகாப்பு வளையங்களாலும் பயன் இல்லை; ஆங்கு = அதுபோல; பொச்சாப்பு உடையார்க்கு நன்கு இல்லை = கடமையை மறந்தவர்களுக்கு எவ்வளவுதான் நல்லவைகள் வாய்க்கப்பெற்று இருந்தாலும் அதுவும் இல்லாமல் போகும்


அடுத்து வரும் குறள்களில் ‘இழுக்கி’, ‘இழுக்கா’ என்ற சொற்களைப் பயன்படுத்துகிறார்.


முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை

பின்னூறு இரங்கி விடும்.” --- குறள் 535; அதிகாரம் – பொச்சாவாமை


முன்னுறக் காவாது இழுக்கியான் = வரப்போவதை முன்பே அறிந்து காக்காமல் பொச்சாப்பால் மறந்து இருப்பவன்; தன்பிழை = அவனின் தவறு; பின் ஊறு இரங்கி விடும் = பின்பு அந்தத் துன்பங்கள் வரும் போது வருத்தப்பட நேரிடும்.


இந்தக் குறள் எப்படி இருக்கு என்றால்


வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்.” --- குறள் 435; அதிகாரம் – குற்றங்கடிதல்


ரொம்ப நாளைக்கு முன்னாடி இந்தக் குறளைச் சிந்தித்தோம். (இங்கே காணலாம்)


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.




34 views5 comments

5 commentaires


அஞ்சுவது அஞ்சாமை பேதமை - ஒரு அருமையான குறள். நிச்சயம் சிந்திப்போம் ஐயா.

J'aime

பொச்சாப்பைக் கண்டு நிச்சயம் பயம் கொள்ள வேண்டும்.

J'aime

Membre inconnu
27 nov. 2021

I am adding an explanation on this tamil grammar Uvamai Ani in particular explained to me by my friend Arumugam தமிழ் இலக்கணத்தை எழுத்து, சொல்,பொருள்,யாப்பு,அணி என்று நான்கு வகையாக வகுத்தனர் நம் இலக்கண ஆசிரியர் கள் தொல்காப்பியரும் நன்னூல் ஆசிரியரும்.இவற்றில் யாப்பிலக்கணம் பாடல்களின் வகைபற்றியும் அடிகளின் அளவு பற்றியும் விவரிக்கும். எடுத்துக்காட்டாக வெண்பா நான்கு அல்லது இரண்டு அடிகளையும் ஆசிரியப்பா நான்கு அடிகளுக்கு மேற்பட்டதாயும் இருக்கும். நளவெண்பா,திருக்குறள் போன்ற நூல்கள் வெண்பவாகும்.பெரும்பாலான சங்க பாடல்கள்,சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியன ஆசிரியப்பா வில் எழுதப்பட்டுள்ளன.

அணி இலக்கணம் ஒரு பாடலுக்கு அழகு சேர்க்க உவமானம், உவமேயம் போன்ற வற்றை சேர்த்து எழுதுவது. ஒரு பெண்ணுக்கு அணிகலன்கள்(ஆபரணங்கள் )எப்படி அழகை கூட்டுகிறதோ அது போல் ஒரு பாடலுக்கு அழகு சேர்க்க புலவர்கள் அணிசேர்த்து எழுதுவது மரபு. தெரியாத ஒன்றை தெரிந்த ஒன்று மூலம் விளக்குவது உவமை அணி எனப்படும். முத்து போல் பல். முத்து வெண்மையானது.தெரிந்த ஒன்று. அதனால் பல்லின் வெண்மையை சொல்ல முத்தினை உவமையாக சொல்லப்பட்டது . இங்கு பொச்சாவாமை என்ற அதிகாரத்தில் வள்ளுவ…

J'aime
En réponse à

Nice explanation on uvamai aNi. Thanks a lot.

J'aime

Membre inconnu
27 nov. 2021

Very nicely explained linked with "varumunnar Kavathan Kural" On the sbject of Fear Thiruvalluvar also says "Anjuvadhu Anjamai Pedhamai Anjavadu Anjal Arivar Thoshil " I wonder whether Thiruvalluvar includes Pochhamai also under "Anjuvadhu" category and should be avoided. keeping the unpleasant future consequences in mind.

J'aime
Post: Blog2_Post
bottom of page