26/11/2022 (632)
ஒரு போருக்கு அல்லது ஒரு போட்டிக்கு ஆயத்தமாகனும்.
முதல் படி என்னவென்றால், அதை வெற்றிகரமாக செய்துமுடிக்கும் வழிவகைகளை ஒன்றுவிடாமல் ஆராயனுமாம்.
இரண்டாவது படி, சரியான களத்தை தீர்மானிக்கனுமாம்.
நம்மாளு: அடுத்து என்ன ஐயா?
ஆசிரியர்: அந்தக் கேள்விக்கு இடமே இல்லை என்கிறார்.
“அஞ்சாதே! புகுந்து புறப்படு வெற்றி நிச்சயம். வேறு எந்தத் துணையும் வேண்டாம்” என்கிறார்.
“அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இட த்தால் செயின்.” --- குறள் 497; அதிகாரம் – இடனறிதல்
எஞ்சாமை = ஒன்றுவிடாமல்; எஞ்சாமை எண்ணி இட த்தால் செயின் = ஒன்று விடாமல் எண்ணி தக்க இடத்தையும் தேர்ந்து எடுத்து விட்டால்; அஞ்சாமை அல்லால் துணைவேண்டா = அடுத்து வேண்டிய துணை அஞ்சாமை ஒன்றுதான். வேறு எந்தத் துணையும் வேண்டாம்.
ஒன்று விடாமல் எண்ணி தக்க இடத்தையும் தேர்ந்து எடுத்து விட்டால்; அடுத்து வேண்டிய துணை அஞ்சாமை ஒன்றுதான். வேறு எந்தத் துணையும் வேண்டாம்.
அதுதான் எல்லாத் துணையையும் எண்ணிவிட்டாயே! பிறகு என்ன தயக்கம்? என்கிறார்.
சிலர், சாலைகளில் உள்ள போக்குவரத்து விளக்குகள் எல்லாவற்றிலும் பச்சை நிறம் இருக்க வேண்டும் என்று காத்திருப்பார்கள். அது எப்படி இயலும்? இதை தவிர்க்கனும். எஞ்சாமை எண்ணுவது என்பது இதுவல்ல!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments