30/01/2021 (13)
வள்ளுவப்பெருந்தகை அருளைப் பற்றி சொல்றதுக்கு பதிலா ஒரு கேள்வியைப் போட்டார்.
படி, படி, மேலே உயர்வதற்கு அதான் நிலைத்தப் படின்னு சொல்றாங்களே ‘கல்வி’யை அதன் பயன் என்ன?
நம்மாளு: தெய்வமே நீங்களே பதில் சொல்லிடுங்க, நான் கேட்டுக்கிறேன்.
வள்ளுவர் தொடர்ந்தார்: கல்வியாலே அறிவு பிறக்கும்.
நம்மாளு: அதான் தெரியுமே
அறிவினாலே ஒழுக்கம் வளரும்
நம்மாளு: அதான் தெரியுமே
ஒழுக்கமும் அன்பானதாக மலரனும். நான் தான் படிச்சிட்டேனேன்னு, இது தான் ஒழுக்கம்னு அடக்குமுறையை அமல் படுத்தக்கூடாது.
நம்மாளு: சரி சார்.
நம்ம கூட இருக்கிறவர்கள் கிட்ட செலுத்தறது தான் அன்பு.
நம்மாளு: அப்படின்னா சார்?
அப்படின்னா, உன் சொந்தங்கள், நண்பர்கள் அவங்க கிட்ட நீ பாசமா நேசமா இருப்ப இல்லையா அது தான் அன்பு. அதாவது நமக்கு தொடர்புடையவர்கள்கிட்டே செலுத்தறது அன்பு.
நம்மாளு: அப்படியா சார்?
அன்பு என்னவாகனும் தெரியுமா, அருள் ஆகனும்.
நம்மாளு: ??? (மைன்ட் வாய்ஸ் –இன்னும் பதில் வரலை)
அருள் செய்யறதுன்னா நமக்கு தொடர்பில்லாதவர்களிடமும் அன்பு செலுத்தறது. அது தான் ‘அருள்’.
நம்மாளு: அப்போ நாம எல்லார்கிட்டேயும் அன்பு செலுத்தறது தான் அருள். இல்லையா சார்.
சபாஷ். சரியா பிடிச்சிட்டே. எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டுவது தான் அருள்.
நம்மாளு: ரொம்ப நன்றி சார். ஆனா, நீங்க ‘கற்றதனால் ஆய பயன்’னு வேற ஏதோ சொல்லியிருக்கீங்களே சார்?
வள்ளுவப்பெருமான் யோசனையில் ஆழ்ந்தார்.
நிற்க.
“அருளென்னும்அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச்செவிலியால் உண்டு” – குறள் 757; அதிகாரம் – பொருள் செயல் வகை
அன்பின் குழந்தை அருள். இது வளர்வதற்கு தேவையான செவிலி (nurse) யாரென்றால் அது தான் ‘பொருள்’. ரொம்ப நல்லா இருக்கு இல்ல.
ஆகையினால் ‘செய்க பொருளை’.
நன்றி. மீண்டும் சந்திப்போம் வேறு ஒரு குறளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments