11/03/2022 (378)
“செற்றார் பின் செல்லா பெருந்தகைமை” இருக்காது அன்புடை நெஞ்சங்களிடம்ன்னு சொன்ன நம் பேராசான், இருந்தாலும் புலம்பாம இருக்கமுடியுமா?ன்னு அவளை புலம்பவிடுகிறார். (ஆன்மீகத்திலே இதை ‘தாச மார்க்கம்’ என் கிறார்கள்.)
அப்படித்தான் ‘அவள்’ புலம்புகிறாள்.
அவங்க அவங்க வேலையைப் பார்த்துட்டு போகும்போது உனக்கும் மட்டும் ஏன் அவர் பின்னாடி போற வேலை என்று தனது ஆற்றாமையை வெளிப்
படுத்துகிறாள்.
“அவர் நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன் நெஞ்சே
நீ எமக்கு ஆகாதது.” –குறள் 1291; அதிகாரம் - நெஞ்சோடு புலத்தல்
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் =அவருடைய நெஞ்சம் அவரை மட்டும்தான் சிந்திக்கிறது என்று தெரிந்தும்; நீ எமக்கு ஆகாதது எவன்? = நீ மட்டும் ஏன் எனக்கு ஆகாம இருக்கே?
பி.கு.: இன்றைக்கு சுருக்கமா முடிச்சுட்டேன். மகிழ்ச்சியா இருங்க.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments