நன்றி, மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.
இல்வாழ்வானுக்கு மொத்தம் பதினோறு கடமைகளா?
வள்ளுவப்பெருமான் அப்படி தான் வரிசை படுத்தறார். ஏற்கனவே, நம்முடன் தொடர்புடைய மூன்று பருவத்தினருக்கும் துணையாக இருக்கனும்ன்னு பார்த்தோம் குறள் 41ல. இது அன்பின் பாற்பட்டது.
“இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை” ---குறள் 41; அதிகாரம் - இல்வாழ்க்கை
அடுத்து, அப்படியே நம்மை அடுத்த கட்டத்துக்கு upgrde, அதாவது அருள் நிலைக்கு உயர்த்துவதற்கு வழி சொல்றாரு குறள் 42 மற்றும் 43ல.
எல்லாரையும் பார்த்தா என் புழைப்பு என்னாகுங்கன்னு நாம கேட்கறத்துக்கு முன்னாடி ‘உன்னை’யும் பார்த்துக்கோன்னு நம்மளையும் சேர்த்து விட்டுடாறரு!
‘சுவரில்லாமல் சித்திரமில்லை’; ‘தனக்கு மிஞ்சிதான் தானம்’, நமக்கு தெரியாதா என்ன?
வெற்றுச்சுவராகவே இருப்போமா இல்ல, அதை நல் ஒவிய களமா மாற்றுவோமா? ங்கறதல தான் இருக்கு நம் வாழ்வின் ரகசியம். நிற்க
அருளின் பாற்பட்டு, நாம செய்யவேண்டிய அடுத்த கடமைகள் மூன்றினை குறள் 42ல் வரிசை படுத்துகிறார்.
வாழ்கையிலே கைவிடப்பட்டவர்கள், வருமையிலே உழல்பவர்கள், ஆதரவின்றி இறந்தவர்களுக்கும் இல்வாழ்வான் முடிஞ்சவரையிலே துணையா இருக்கனும்
“துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை” --- குறள் 42
துறந்தார்க்கும் = (வாழ வழியிலாமல்) துறந்தார், வாழ்கையிலே கைவிடப்பட்டவர்கள்; துவ்வா தவர்க்கும் = நுகராதவர்கள், வறியவர்கள், வறுமையிலே உழல்பவர்கள்; இறந்தார்க்கும் = ஆதரவின்றி இறந்தவர்களுக்கும்; இல்வாழ்வான் என்பான் துணை= இல்லறத்தில் இருப்பவர்கள் துணையாகனும்.
(முதுமொழிக் காஞ்சின்னு ஒரு பதினெண் கீழ்கணக்கு நூல் இருக்கு. அதிலே பத்து, பத்தா நூறு அறக்கருத்துக்கள் இருக்கு. அதிலே ‘துவ்வா பத்து’ன்னு பத்து இருக்கு ! – ஒரு தகவலுக்காக)
அடுத்த ஐந்து கடமைகளை வள்ளுவப்பெருமான் குறள் 43ல தெளிவு படுத்தறார்.
“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.” --- குறள் 43; அதிகாரம் - இல்வாழ்க்கை
இதை விரித்து நாளைக்கு பார்க்கலாமா?
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்.
コメント