17/03/2021 (59)
விதிவிலக்கே விதியாகலாமா?
“இருவேறு உலகத்து இயற்கைதிருவேறு தெள்ளியர்ஆதலும்வேறு.” --- குறள் 375
திரு = செல்வத்தில் திளைப்பவர்களுக்கு ஆகி வந்துள்ளது (ஆகு பெயர்)
தெள்ளியர் = அறிவுடையவர்
உலகத்து இயற்கையே இப்படி தான். ஒன்று ஒழுங்கா இருக்கும். மற்றொன்று விதி விலக்காகவும் இருக்கும் புரிஞ்சுகிடுங்க ப்ளிஸ் – இது தான் பொருள்.
“நுண்ணிய நூல்பலகற்பினும்மற்றும்தன் உண்மைஅறிவேமிகும்.” ---குறள் 373
இந்த குறளில், ஒருத்தன் என்ன தான் கற்றாலும் அது அவனுடைய அறிவை மிகைப் படுத்தாமலும் போகலாம்ன்றார். நிற்க.
இந்த குறள்களை தான் ஏற்கனவே பார்த்தோமேன்னு கேட்கறீங்களா? ரொம்ப சரி. ஒரு கவனமூட்டலுக்காக மீண்டும்.
அந்த குறள்களின் கடைசியில கேள்வி ஒன்று இருந்தது.
எல்லாம் செய்தும் ஒன்னுமில்லாம போறது ஏன்? அதுக்கு ‘சும்மா இருந்தே சும்மா’ இருக்கலாமே? ‘என்ன தான் பண்றது?’ இப்படி பல கேள்விகள்.
கேள்விகளை அப்புறம் பார்க்கலாம்ன்னு அப்போ ஆசிரியர் சொன்னது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
அந்த கேள்வி அப்படியே இருக்க திருக்குறள் அமைப்பு முறை பற்றியும் அதைத் தொடர்ந்து ‘அறன் வலியறுத்தல்’ தொடங்கி பல குறள்களைப் பார்த்தோம்.
எல்லா இயல்களிலும் பல அதிகாரங்களை வைத்த வள்ளுவப்பெருந்தகை ‘ஊழியல்’ன்னு ஒரு தனி இயல் அமைத்து அதில் வழக்கத்துக்கு மாறாக அந்த இயலில் ஒரே ஒரு அதிகாரம் (38) ‘ஊழ்’ மட்டும் அமைத்திருக்கிறார். அதுவும் அறத்துப்பால் முடிகிற இடத்துலயும் பொருட்பால் தொடங்குகிற இடத்துலயும் வைக்கிறார்.
சில சமயம், என்ன செஞ்சு என்ன பண்ணாலும், சோர்வு ஏற்படலாம். அதுக்கு ஒரு ஆறுதல் போல இருக்கட்டுமேன்னு இந்த ‘ஊழ்’ங்கிற அதிகாரம் இருக்கா?
அந்த அதிகாரத்தை முடிக்கும் போது கடைசியா ஒரு குறள்:
“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான்முந் துறும்.” ---குறள் 380; அதிகாரம் – ஊழ்
என்ன தான் செஞ்சாலும் ‘விதி’ ன்னு ஒன்னு இருக்குப்பா அது முன்னாடி வரும்பா! ங்கிற மாதிரி பொருள் வருது. அது அப்படியா?
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comentários