top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

கேடில் விழுச்செல்வம் ... 400, 05/02/2021

05/02/2021 (19)

நன்றி.

100 ல் இனிய சொற்களை பேச சொன்ன வள்ளுவப்பெருந்தகை

200 ல் பயனுடைய சொற்களை மட்டும் பயன் படுத்துங்கன்னார்.

300 ல் வாய்மைதான் நன்றுன்னு சொல்லி, வாய்மைன்னா ‘தீங்கு இலாத சொலல்’ ன்னு 291 ல குறிப்பிட்டார்.


சரி, 400 ல என்ன சொல்லியிருப்பாருன்னு எனக்கு ஒரு ஆர்வம். போயி பார்த்துடலாம் வாங்க.


அடடா, செல்வத்தைப் பற்றி சொல்லியிருக்காரு. அதுவும் எப்படிப் பட்ட செல்வம்?


மதிப்பு மிக்கதாம். அது மட்டுமல்ல, அந்த செல்வம் அள்ள, அள்ள குறையாதாம்; அதை வாரி, வாரி கொடுக்க பெருகுமாம்; யாரும் திருட முடியாதாம்; அரசாங்கம் அதுக்கு வரி போட முடியாதாம்; ரொம்ப தான் அடுக்குறாரு நம்ம வள்ளுவப்பெருமான்.


அந்த செல்வத்தை சரியா பயன் படுத்த தெரிஞ்சுட்டா மத்தது எல்லாம் ஜூஜுபி! (‘ஜூஜுபி’ உங்களுக்கு சரியா வரலைன்னா ‘சப்பை’ ,  ‘ஒன்னுமே இல்லை’ ன்னு போட்டுக்குங்க, சரியா!)


அந்த செல்வம் என்னதுன்னு கண்டு பிடுச்சிட்டீங்க இல்ல. அதே தான் ‘கல்வி’ங்கிற செல்வம். அதை தான் குறள் 400 லே இப்படி போடறாரு:


கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை.”  400


மாடல்ல = பொருட்டல்ல; மற்றயவை = மத்தது எல்லாம்


நம்ம வள்ளுவப்பெருமான் பெரிய ஆளுதான் சந்தேகமேயில்லை.


குறள்களை சரியா அங்கங்கே பொறுத்தி வைச்சிருக்காருன்னு…

… யோசனை பண்ணிட்டு இருக்கும் போது, என் ஆசிரியரின் அழைப்பு. தம்பி, நம்ம பேராசான், 1330 குறள்களில் ஒரே ஒரு குறளில் மட்டும் துணைக்காலை பயன் படுத்தலை தெரியுமோ?ன்னு ஒரு கேள்வியை போட்டாரு. மேலும்,

தமிழிலே துணை எழுத்துக்கள்ன்னு 18 இருக்கறது தெரியும் இல்ல உனக்கு. அதான்‘கால்’ போட்ட எழுத்துக்கள்பா.  க்+ஆ = கா, … அந்த மாதிரின்னார்.


நான் நொந்த மாதிரியாயிட்டேன். தேடுவோம் வாங்க.


நன்றி.  மீண்டும் சந்திப்போம் வேறு ஒரு குறளுடன்.


உங்கள் அன்பு  மதிவாணன்.




5 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page