13/02/2021 (27)
நன்றி, நலம், வாழ்த்துகள்.
நேற்றைக்கு, திருக்குறள் ஒரு அறநூல், அறத்தை சொல்லத் தொடங்கிய வள்ளுவப்பெருந்தகை, நான்கு அறக்கூறுகளான அறம், பொருள், இன்பம், வீடு எடுத்து, அதில் ‘வீடு’ பற்றி சொன்னா எல்லாருக்கும் சரியா இருக்காதுன்னு நினைத்திருப்பார்ன்னு பார்த்தோம் இல்லையான்னு … மீண்டும் ஆரம்பிச்சு என்னைப் பார்த்தார் ஆசிரியர்.
(அதுக்குள்ளே நான் எங்கேயோ என் உலகத்துக்கு போயிட்டேன்)
தம்பி உங்களைத்தான், சொன்னது விளங்குச்சான்னாரு.
ஐயா, மன்னிச்சிடுங்க. விளங்குது. எனக்கு நீங்க கற்று கொடுத்த ஒரு குறள் கவனத்துக்கு வந்துட்டுது அதான்னு … இழுத்தேன்.
அப்படியா, அந்த குறளை சொல்லு பார்க்கலாம்ன்னார்.
இதோ அந்த குறள்:
“காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு” --- குறள் 849; அதிகாரம் - புல்லறிவான்மை
(காணாதான் = அறிவற்றவனாக ஆகப் போகிறவர் (சொல்பவர்); காட்டுவான் = ஒரு கருத்தை சொல்றது; தான்காணான் = அவனுக்கு தெரியாது; காணாதான் = (நம்மாளு) உள்வாங்கும் திறன் இல்லாம கேட்கிறவன்; கண்டானாம் தான் கண்டவாறு = அவனுக்கு தெரிந்த வகையிலே தான் அவன் புரிஞ்சிப்பான்.)
கொஞ்ச நேரம் யோசிச்ச என் ஆசிரியர், இது இங்கே சரியா வராது.
இருந்தாலும் தொடர்பு இருப்பதையும் மறுக்க முடியாது. பரவாயில்லை, இதை பார்த்துட்டே மேல போகலாம். விளக்கத்தை சொல்லுன்னார்.
என் உரை: உள்வாங்கும் திறன் இல்லாத ஒருத்தருக்கு ஒரு செய்தியை சொன்னா அதை அவர் அறிஞ்சவரையிலே தான் எடுத்துக்கிடுவாரு. அது மட்டுமில்லாமே சொன்னவருக்கு விஷயம் சரியா தெரியலை போலன்னும் நினைச்சுப்பாரு. (வேற யாருமில்ல நம்மாளு தான் அந்த ஒருத்தர்!).
இது போல ஆகும்னு சொன்னவருக்கு தெரியலைன்னா அவரும் ‘அறிவில்லாதவர்’ன்னு ஆயிடுது.
சரியா ஐயா?ன்னேன்.
ஓரளவுக்கு பரவாயில்லை. நேரமாயிட்டுது. நாளைக்கு பார்க்கலாம்ன்னு சொல்லிட்டு இன்னோரு குறள் கூட இருக்கு. எல்லாரும் ஒத்துக்கிட்டதை வீம்புக்கு மறுக்கிறவனை பேய்ன்னும் சொல்லியிருக்காரு தெரியுமான்னார். தேடலாம் வாங்க.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Commenti