18/10/2021 (237)
தலைமையிடம் சொல்ல வேண்டியதை எப்படிச் சொல்வது?
தலைமையிடம் மட்டுமல்ல எங்குமே இதைப் பயன்படுத்தி வெற்றி பெறலாம்.
இடம், பொருள், ஏவல் பார்த்து பேசனும்!
செய்தியைச் சொல்லியே ஆகனும்ன்னு அடம் பிடிக்காமல், முதலில் கேட்கக்கூடிய மன நிலையில் இருக்காங்களான்னு பார்க்கனுமாம். இல்லையென்றால் அதற்கு உரிய சூழ்நிலையை உருவாக்கனும். அதற்கும் பல வழி முறைகள் இருக்கு. இது தான் முதல் குறிப்பு. (இதைத்தான் ஆங்கிலத்தில் identifying the pain points என்கிறார்கள்).
சொல்வதற்கு உரிய காலத்தை தேர்ந்து எடுக்கனும். நாம சொன்ன செய்தியிலிருந்து அவர்கள் அதனை ஒட்டி நடவடிக்கை எடுப்பதற்கு உண்டான காலமாக இருக்க வேண்டும். இது இரண்டாவது குறிப்பு. (இது action points).
மூன்றாவது குறிப்பு, எதிர்மறைச் சொற்களையும் தேவையில்லாததையும் தவிர்க்க வேண்டும். (இது cut the craps).
எது அவர்களுக்குத் தேவையோ அதைச் சொல்ல வேண்டும். இது நான்காவது குறிப்பு. (Highlight the deliverables).
கடைசிக் குறிப்பு, கேட்பவர்கள் விரும்பும் விதம் சொல்ல வேண்டும். (இது icing on the cake)
Pain points, action points, cut the craps, highlight the deliverables and icing on the cake – இதைத்தான் எல்லா விற்பனையாளர்களும் பயன் படுத்தறாங்க. MBA ன்னு ஒரு படிப்பு இருக்கு இல்லையா அதிலே இதையெல்லாம் படிக்கறாங்க.
ஆனால், நம்ம பேராசான், MBA ன்னு ஒன்று இல்லாத காலத்தில், ஏழு வார்த்தையிலே சொல்லி இருக்கார்.
“குறிப்பறிந்து காலம்கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.” --- குறள் 696; அதிகாரம் – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
குறிப்பறிந்து = ஏற்ற சூழ்நிலையை அறிந்து; காலம் கருதி = சரியான நேரமா இது என்று பார்த்து; வெறுப்பில = கேட்க விருப்பமில்லாததை தவிர்த்து; வேண்டுப = எது தேவையோ அதை மட்டும்; வேட்ப = விரும்பும் விதத்தில்; சொலல் = சொல்ல வேண்டும்.
ஏற்ற சூழ்நிலையை அறிந்து, சரியான நேரமா இது என்று பார்த்து, கேட்க விருப்பமில்லாததை தவிர்த்து, எது தேவையோ அதை மட்டும், விரும்பும் விதத்தில் சொல்ல வேண்டும். – என்னே அழகு!
Comments