30/01/2023 (697)
“பார்வை சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்!”
“அழகு என்பது அவர் அவர் பார்வையில் உள்ளது (Beauty is in the eyes of the beholder)”.
“பார்வையே சரியில்லை. அப்புறம் எப்படி உருபடறது?” ... அன்றாடம், நாம் உலகியலில் இப்படியெல்லாம் கேட்டிருப்போம்.
பார்வைக்கு vission (பார்வை), perception (உணர்தல்) இப்படி பல பொருள்கள் இருக்கு.
பார்வை என்பது ‘கண்’ என்னும் புலனுக்கு மட்டும் தொடர்புடையதல்ல! எல்லாப் புலன்களின் மூலமாகவும் பார்க்கிறோம். ‘கண்ணோட்டம்’ என்பது எல்லாப் புலன்களுக்கும் உரியது.
உலகமே பெரும்பாலோனர்களின் உள்ளத்தில் ஈர உணர்ச்சி, அதாவது இரக்கம், இருப்பதால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த இரக்கம் அனைவருக்குமே தேவை என்றால், ஆள்பவர்களுக்கு, தலைமைக்கு இன்றியமையாதது. அவர்களால் ஒரு நொடியில் பலரைக் கரையேற்றிவிட முடியும்!
அப்படியில்லாமல், தலைவர்கள் அராஜகவாதிகளாக இருந்தால், இரக்கம் இல்லாதவர்களாக இருந்தால், அவர்கள், இந்தப் பூமிக்கு பாரம்தான் என்கிறார் நம் பேராசான்.
“கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.” --- குறள் 572; அதிகாரம் – கண்ணோட்டம்
உலகியல் கண்ணோட்டத்து உள்ளது = உலகம் இயங்குவது என்பது, குறிப்பாக தலைவர்களின், இரக்க உணர்வுகளில் உள்ளது. அஃதிலார் = அவ்வாறு இரக்க உணர்வு இல்லாதவர்கள்; உண்மை = என்ற உண்மை எதைக் குறிக்கிறது என்றால்; நிலக்குப் பொறை = அவர்கள், இந்த நிலத்திற்கு பாரம்தான் என்பதைக் குறிக்கிறது.
உலகம் இயங்குவது என்பது, குறிப்பாக தலைவர்களின், இரக்க உணர்வுகளில் உள்ளது. அவ்வாறு, இரக்க உணர்வு இல்லாதவர்கள் என்ற உண்மை எதைக் குறிக்கிறது என்றால் அவர்கள், இந்த நிலத்திற்கு பாரம்தான் என்பதைக் குறிக்கிறது.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments