top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

செய்க பொருளை ... 759, 247

29/01/2021 (12)

நலம். நன்றி. வாழ்த்துகள்.

நேற்று ஒரு கேள்வியோடு முடித்திருந்தோம். அதற்கான பதில்:


“செய்க பொருளைச் செறுநர் செருக்குஅறுக்கும்

எஃகு அதனின் கூரியது இல்.” --- குறள் 759; அதிகாரம் – பொருள் செயல் வகை


அவசர, அவசரமா தொடங்குகிறார் வள்ளுவப்பெருமான். (கம்பர், இதை படிச்சுட்டுத்தான் “கண்டேன் சிதையை” ன்னு போட்டார் போல.)


“பொருளை உண்டாக்கு” அது தான் கூரிய வாள். கண்ணால் காண முடியாத மாற்றாரின் அந்தச் செருக்கினை அறுக்க வேறெந்த வாளும் பயன்படாது.


இன்னுமா கேட்டுட்டு நிக்கிறே. போகலையான்கிற மாதிரி இருக்கு இந்த குறள்.

கேட்டவன் என்னைப் போல இருந்திருப்பான்னு நினைக்கிறேன். அவனை மீண்டும் வள்ளுவர் கேட்டு இருப்பார். (ஒரு கற்பனை தான். நீ என்ன பக்கத்திலிருந்து பார்த்தியான்னு கேட்க்கப் படாது.)


பூமிக்கும் சூரியனுக்கும் எவ்வளவு தூரம்?

நம்மாளு: தெரியலையே சார்

நீ போகப் போற ஊருக்கு எவ்வளவு தூரம்?

நம்மாளு: தெரியலையே சார்

எமனுக்கு வாகனம்?

நம்மாளு: எருமை கிடா சார். இது கூடவா தெரியாது சார்.


சபாஷ். அப்போ இந்தக் குறள் உனக்குப் புரியும். இதோ:


அருள் இல்லார்க்கு அவ்வுலகம்இல்லை பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு” ---குறள் 247; அதிகாரம் - அருளுடைமை


இப்போ நீ ‘அருள்’ செய்யலைனா, ‘மேல்லோகம்’ன்ற பாரு அங்கே நீ சுகமா இருக்க முடியாது. பொருள் இல்லைன்னா இந்த உலகம் எப்படி கசக்குமோ அது போலன்னு - நிறுத்திட்டு கேட்டாரு, புரிந்ததான்னு.


நம்மாளு: புரிஞ்சிடுச்சு சார். ஆனா ஒரு டவுட்டு! ‘அருள்’ ன்னா என்னா சார்?

வள்ளுவப்பெருமான் என்ன சொல்லியிருப்பாருன்னு நாளைக்கு பார்போம்.


நன்றி. மீண்டும் சந்திப்போம் வேறு ஒரு குறளுடன்.


உங்கள் அன்பு மதிவாணன்





Commenti


Post: Blog2_Post
bottom of page