06/03/2022 (373)
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா
எனக்கு இன்பம் சேர்க்க மாட்டாயா…
…
அறம் இதென்றும் யாம் மறம் இதென்றுமே
அறிகி லாத போது -- யாம்
அறிகி லாத போது -- தமிழ்
இறைவ னாரின் திருக்குறளிலே ஒருசொல்
இயம்பிக் காட்டமாட் டாயா? நீ
இயம்பிக் காட்டமாட் டாயா? --- பாவேந்தர் பாரதிதாசன்
‘அவன்’ வாய் மேற்கண்ட பாடலை முனுமுனுக்கிறது.
மேலும், துன்பம் வரும்போது யாரும் துணை இல்லை என்றால் யாரை யாழ் மீட்டக் கூப்பிடுவது?
எனக்கு என் நெஞ்சோடு பேசி, கூடிக் கொள்வதைத் தவிர வழியில்லை. இந்த தோழி கூறுவது மேலும் கலக்கம் உறவைக்கிறது. நீண்ட நாள் பிரிந்து இருந்து விட்டேனோ?
இவ்வாறெல்லாம் அவன் மனம் கலங்கிக் கொண்டு இருக்கும் போது…
தோழி: ரொம்பதான் கலங்காதீங்க. அவள் தழுவிக்கொள்வது அவளுடைய நெஞ்சைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.
புணர்ச்சிவிதும்பல், அதாவது கூடித்தழுவதலை விரும்பியும் அது நடை பெறாவிட்டால் அடுத்து தன் நெஞ்சத்தை தழுவிக் கொள்வதுதான் வழி. (கூர்ந்து கவனிக்க. வேறு எதையும் தழுவக்கூடாது என்பது குறிப்பு).
ஆகையினால், நம் பேராசான் அடுத்த அதிகாரமாக அமைத்திருப்பது “நெஞ்சோடு புலத்தல்”. (புலத்தல் – தழுவுதல்)
அவன்: நம் பேராசான் சொன்ன குறளைச் சொல்கிறேன், நீயே கேள்.
“துன்பத்திற்கு யாரே துணையாவார் தாம்உடைய
நெஞ்சம் துணையல் வழி.” --- குறள் 1299; அதிகாரம் – நெஞ்சொடு புலத்தல்
துன்பத்திற்கு = துன்பம் வந்து விட்டால்; தாம்உடைய நெஞ்சம் துணையல் வழி = தன்னுடைய நெஞ்சமே துணை; துணையாவார் யாரே = வேறு துனையாவார் யாரும் இல்லை.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments