08/08/2022 (527)
எந்த நிலையிலும், உன் நிலையில் இருந்து தாழ்ந்து, இழி நிலைக்குச் செல்லாதே என்பதுதான் கருத்து என்று நிறுத்தியிருந்தார் ஆசிரியர்.
தன் நிலையில் இருந்து இறங்கி, குடியின் மானமும், தன் மானமும் கெட நிற்பவர்கள் எப்படி பார்க்கப்படுவார்கள் என்பதற்கு ஒரு கடுமையான உதாரணம் சொல்கிறார்.
அவர்களை ஒரு பொருட்டாகக்கூட மதிக்க மாட்டார்களாம்.
அதுவும் எப்படி?
தலையில் இருந்து உதிர்ந்த “______________” போல என்கிறார் நம் பேராசான்.
“____________” இப்போ ஒரு unparliamentary word. சட்டசபையிலும், பாராளுமன்றத்திலும் பயன்படுத்தவே கூடாது.
என்ன ஒன்று, நம் பேராசான் “_________” போடலை.
நேராகவே சொல்கிறார்: உதிர்ந்த “மயிர்” போல என் கிறார்.
நம் பெருந்தகையா அவ்வாறு சொன்னதுன்னு உங்களுக்கு சந்தேகம் இருந்தா அந்தக் குறளை நீங்களே பாருங்க. அவருக்கு அவ்வளவு கோபம் வந்திருக்கு.
“தலையின் இழிந்த மயிர் அணையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.” --- குறள் 964; அதிகாரம் – மானம்
மாந்தர் = நல் குடியில் பயனிக்கும் மக்கள்; நிலையின் இழிந்தக் கடை = தம் உயர்ந்த, பண்புள்ள தளத்தை விட்டு இழி செயல்கள் செய்து தாழ்ந்து விடுவார்களானால்; தலையின் இழிந்த மயிர் அணையர் = அவர்களை, தலையில் இருந்து உதிர்ந்த ரோமங்களைப் போல ஒரு பொருட்டாக யாரும் மதிக்க மாட்டார்கள்.
நல் குடியில் பயனிக்கும் மக்கள், தம் உயர்ந்த, பண்புள்ள தளத்தை விட்டு இழி செயல்கள் செய்து தாழ்ந்து விடுவார்களானால், அவர்களை, தலையில் இருந்து உதிர்ந்த ரோமங்களைப் போல ஒரு பொருட்டாக யாரும் மதிக்க மாட்டார்கள்.
“வந்தா மலை; போனால் _____” ன்னு செயல்பட மாட்டார்களாம்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
Comentarios