top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

புத்திமானுடைய மனம் ...

22/10/2022 (598)

ஞானம் இரண்டு வகைப்படும். ஒன்று அபர ஞானம், மற்றொன்று பர ஞானம்.

அபரஞானத்திற்கு இரண்டு படிநிலைகள்: 1. கேட்டல்; 2. சிந்தித்தல்

பர ஞானத்திற்கும் இரண்டு படி நிலைகள்: 3. தெளிதல்; 4. நிட்டை கூடுதல்


அபரம் – வெளி உலகிற்கு தொடர்புடையது; பரம்- உள்ளுக்குள் நிகழ்வது.


பரிசுத்த தேவாகமத்தில் “நீதி மொழிகள்” என்று ஒரு அதிகாரம் இருக்கிறது. அது சாலமன் என்ற அரசனால் எழுதப்பட்டது (King Solomon’s Proverbs): அதில் 18ஆவது அதிகாரம் - பதினைந்தாவது வசனம்:


“புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; ஞானியின் செவி அறிவை நாடும்.”


“The heart of the discerning acquires knowledge; The ears of the wise seek it out.” --- Proverbs 18:15 (ESV)


இந்த வசனத்தின் முதல் பகுதி அபர ஞானத்தையும்; இரண்டாம் பகுதி பர ஞானத்தையும் குறிப்பதாக நினைக்கிறேன்.


உள்ளுக்குள் செல்வது அறிவு (input); உள்ளில் இருந்து தோண்டி வெளியே எடுப்பது ஞானம் (output). இடையில் நிகழ்வதுதான் தெளிதல் (transformation).

தெளிந்துவிட்டால் பின் என்ன? மௌனம்! அதுதான் நிட்டை கூடுதல். இது நிற்க.


சரி, இந்தக் கதை இப்ப எதற்கு? அதானே? கேட்பீங்கன்னு தெரியும்.


“சிற்றினம் சேராமை” எனும் 46ஆவது அதிகாரம் நாம ரொம்ப நாளைக்கு முன்னாடி பார்த்திருக்கோம். சொன்னா நம்புங்க. இல்லைன்னா கொஞ்சம் தேடிப் பாருங்க. பொருட்பாலில், அரசியல் பகுதி அது.


அதற்கு அடுத்தது, அதாவது 47 ஆவது அதிகாரம் தெரிந்து செயல் வகை. அதைத் தொடர்ந்து வலியறிதல் (48), காலமறிதல் (49), இடம் அறிதல் (50), தெரிந்து தெளிதல் (51), மற்றும் தெரிந்து வினையாடல் (52).


இது எல்லாமே ஞானத்தின் படி நிலைகள்தான். யாருக்கு? பொருள் தேடுவோர்களுக்கு, உலகியலில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு!


இந்த அமைப்பு முறையே சிறப்பானதாக இருக்கு. நம்ம கையைப் பிடித்து, ஒரு ஒரு படியாக மேலே அழைத்துச் செல்வதுபோல இருக்கு.


மேலும் தொடர்வோம்.


நன்றி. மீண்டும் சந்திப்போம்.


உங்கள் அன்பு மதிவாணன்




2 Comments


Unknown member
Oct 22, 2022

The heart of the discerning acquires knowledge; The ears of the wise seek it out.” --- Proverbs 18:15 (ESV)இந்த வசனத்தின் முதல் பகுதி அபர ஞானத்தையும்; இரண்டாம் பகுதி பர ஞானத்தையும் குறிப்பதாக நினைக்கிறேன். But in first para அபரம் – வெளி உலகிற்கு தொடர்புடையது; கேட்டல் ears ...??

Like
Replying to

Thanks sir for raising a relevant query.

My two cents:


The heart of the discerning acquires knowledge; The ears of the wise seek it out. இந்த நீதி மொழியை கொஞ்சம் விரிக்கலாம் என்று நினைத்தேன். அதன் விளைவு தான் இது:

இந்த வசனத்தின் முதல் பகுதியில் “knowledge” என்று வருகிறது. அடுத்தப் பகுதியில் “wise” வருகிறது. ஒன்று அறிவு; மற்றொன்று ‘அறிவைவிட மேம்பட்டது’. அதாவது ஞானம் என்று எடுத்துக் கொள்ளலாம்.


அதேபோன்று முதல் பகுதியில் ‘heart’ (இதயம்) என்று வருகிறது. இதயம் –மாறுபடுவது; துடித்துக் கொண்டே இருப்பது. நிதானமாக இருக்கத் தெரியாது. இதுவா, அதுவா என்ற குழப்பம் நிறைந்தது.


வசனத்தின் இரண்டாவது பகுதியில் ‘ears’ என்று வருகிறது. காது எந்த செய்தியைக் கேட்டும் வெளிப்பாடாக எதையும் காட்டாது. உள்ளே அனுப்பிவிட்டு அமைதியாக இருக்கும். குழப்பம் இல்லாதது.


வெகுசிலருக்கு காது துடிக்குமே என்பீர்கள். யோசனை பண்ணிப்பார்த்தால் அந்த நபர்களுக்கு இதயம் கொதி நிலையில் இருக்கும்!


அதனால்தான் இந்த வசனம் பல குறியீடுகளைக் கொண்டதாக நினைக்கிறேன். அதாவது அறிவைத் தேடும் நிலையில் நான்…


Like
Post: Blog2_Post
bottom of page