27/01/2021 (10)
நன்றி, நன்றி, நன்றி.
விடுவார என் ஆசிரியர்? வெல்லும் சொற்களாக இருப்பினும் அதிலும் ஒரு சிக்கனம் வேண்டும் தெரியுமா உனக்கு என்றார்.
அப்படியா சார்? என்றேன்.
இதை மட்டும் சுருக்கமா கேளு. எழுதும் போது நீட்டி முழக்கி எழுது! என்று செல்லமாக கடிந்து கொண்டே மேலும் நீட்டினார்!
“சொற்களைப் பயன் படுத்த, பயன் படுத்த நமது வசப்படும். அவ்வாறு முயலவில்லை என்றால் சொல்ல வேண்டிய கருத்துக்கு பலப்பல சொற்களை அடுக்கி நாமும் குழம்பி மற்றவர்களையும் சிரமத்துக்கு உள்ளாக்குவோம்” என்றார்.
சரி சார். இதுக்கு நமது பேராசான் வள்ளுவப்பெருந்தகை எதாவது சொல்லியிருக்காரா அதை கொஞ்சம் சொல்லிடுங்க சார் ப்ளீஸ் என்றேன். (என் பிரச்சனை எனக்கு!)
அந்தக் குறள் தான் 649 வது குறள்:
“பலசொல்லக் காமுறுவர் மன்றமாசு அற்ற
சிலசொல்லல் தேற்றாதவர்.” --- குறள் 649; அதிகாரம் - சொல் வன்மை
மன்ற = தெளிவாக, உறுதியாக, நிச்சயமாக , தேற்றமாக.
(பித்தாகரஸ் தேற்றம் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை)
தேற்றமாட்டாதார் = அறிய மாட்டாதார்
நன்றி. மீண்டும் சந்திப்போம் வேறு ஒரு குறளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்.
Comments