12/10/2021 (231)
தூய்மை, துணைமை, துணிவுடைமை மேலும் வாய்மையும் இருக்கனும் வழி உரைப்பவர்களுக்குன்னு பார்த்தோம். அதைத் தொடர்ந்து நம் பேராசான் என்ன சொல்லப் போகிறார்ன்னு பார்ப்போம்.
தடுமாற்றம் கேள்விப் பட்டு இருக்கோம். விடுமாற்றம், வடுமாற்றம் கேள்விப்பட்டு இருக்கோமா? இதுவும் தூதுக்கு இலக்கணமாம்.
வேண்டியது விடுமாற்றம். வேண்டாதது வடுமாற்றம்.
ரொம்பதான் சிக்கிரம் சொல்லு அது என்னன்னு தானே கேட்கறீங்க. இதோ சொல்லிடறேன்.
‘மாற்றம்’ என்றால் நாம ஏதோ நினைக்கிறோம். ஆனால், அதற்கு ‘சொல்’ என்ற பொருள் இருக்காம்.
அடிச்சு விடறதுன்னு சொல்றோமில்லையா. அதுதான் ‘விடுமாற்றம்’.
இதை நாம வேற பொருளில் பயன் படுத்தறோம். விடுமாற்றம் என்றால் ‘சொன்ன சொல்’. தூதில் அதற்குப் பொருள் தலைமை சொன்னச் சொல், செய்தி. அவ்வளவுதான். அருமையா இருக்கு இல்லையா?
சரி. அது என்ன வடுமாற்றம்? வடுன்னா தழும்பு, தாழ்வு இப்படி பல பொருள் இருக்காம்.
என்ன கண்டுபிடிச்சிட்டீங்களா? ஆமாங்க, தாழ்வு வரும் சொல்லைச் சொல்லக் கூடாதாம்.
அதுவும் எப்படியாம், பேசி, பேசி வாய் சோர்ந்தாலும் தாழ்மை தரும் சொற்களைச் சொல்லக் கூடாதாம். அப்படி இருக்கும் தூதுவன் தான் கில்லாடியாம். நாம இப்போ குறளுக்கு வருவோம்.
வாய்சோரா வன்க ணவன்” ---குறள் 689; அதிகாரம் - தூது
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் = சொன்ன செய்தியை இன்னொரு தலைமைக்குச் சொல்பவர்கள்; வாய்சோரா வடுமாற்றம் =வாய் சோர்ந்தாலும் தவறான சொற்களைத் தவிர்ப்பார்களாம்; வன் கணவன் = கில்லாடிகள், மன உறுதி உடையவர்கள்
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments