25/01/2021 (8)
100, 200, 300, 291 …
“வாய்மையே வெல்லும்”; “சத்யமேவ ஜயதே”; “Truth alone triumphs” - என்னாச்சு இன்றைக்கு குறளை விட்டுட்டு எங்கேயோ போய்ட்டேனேன்னு பார்க்கறிங்க இல்ல. கொஞ்ச நேரத்திலே குறளுக்கு வந்துடறேன்.
தமிழ்நாடுஅரசின் இலச்சினையின் கீழே”வாய்மையே வெல்லும்” உள்ளது. திராவிடக்கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக ஒரு கோபுரம் (எந்தக் கோவில் கோபுரம் அது?); நான்கு முக சிங்கம்; அதன் இரு பக்கங்களிலும் இந்திய தேசியக் கொடி.
அது தான் தெரியுமேன்றிங்களா! ஆனால் இந்திய தேசியக் கொடி வேறு எந்த மாநில இலச்சினையிலும் இது வரை இல்லை என்பதுதான் சிறப்புச் செய்தி.
சரி, சரி இதோ குறளுக்கு வந்துட்டேன். நேற்றைய கேள்விக்கு பல பதில்கள் இருந்தாலும் சிறப்பா அமையறது 300வது குறள்:
“யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற.”--- குறள் 300; அதிகாரம் -
இங்கே தான் ஒரு முடிச்சு. ‘வாய்மை’ ன்னா என்னதுன்னு. அதைப் பார்க்க போயி தான் முன்னாடி நான் சுற்றின சுற்று.
வாய்மை – உண்மையிலேயே உண்மை மட்டும் தானான்னு எனது அருமை ஆசிரியரைக் கேட்டேன். அவருக்கு ஒரு வாய்ப்பு என்னைக் கொட்ட!
முதல்லேயெ நீ ஒழுங்கா படிக்க மாட்டேன்னார். என்னது சார்ன்னு தலையை லேசா ___________.
அந்த “வாய்மை” அதிகாரத்தின் முதல் குறளைப் பார் என்றார்.
“வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.” - 291வது குறள்
இப்போ தான் சரியான பதில் வருகிற மாதிரி தோன்றுகிறது.
சொல் – இனிமையாகவும், பயனுள்ளதாகவும், தீங்கு இல்லாத உண்மையானதாகவும் இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார் –ன்னு முடிச்சிடலாம்ன்னு பார்த்தா, போன ஆசிரியர் மீண்டும் வந்து, அந்த சொல் – சிறப்பான சொல் ஆகவும் இருக்கனும்ப்பா – அது எங்கேயாவது இருக்கான்னு பாருன்னு சொல்லிட்டு வேகமா நகர்ந்துட்டார்.
மறுபடியும் உங்கள் உதவியை நாடி!
நன்றி. மீண்டும் சந்திப்போம் வேறு ஒரு குறளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
コメント